Paikiasothy saravanamuttu biography of christopher walken
பாக்கியசோதி சரவணமுத்து
பாக்கியசோதி சரவணமுத்து | |
---|---|
பிறப்பு | (1892-10-26)26 அக்டோபர் 1892 |
இறப்பு | 28 மே 1950(1950-05-28) (அகவை 57) |
இனம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலண்டன் பல்கலைக்கழகம் |
பணி | அரசு அதிகாரி |
வாழ்க்கைத் துணை | சிபில் தங்கம் |
உறவினர்கள் | சகோதரர்கள்: இரத்தினசோதி, நனசோதி, தர்மசோதி, மாணிக்கசோதி, சப்தரணசோதி |
பாக்கியசோதி சரவணமுத்து (Paikiasothy Saravanamuttu, 26 அக்டோபர் 1892 - 28 மே 1950) இலங்கை அரசு அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]சரவணமுத்து 1892 அக்டோபர் 26 இல் கொழும்பைச் சேர்ந்த மருத்துவர் வேதாரணியம் சரவணமுத்து என்பவருக்குப் பிறந்தார்.[1] இவரது தாயார் யாழ்ப்பாணம்வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.[2] இவரது தந்தை வழிப் பாட்டனார் வேதாரணியம் என்பவர் வட இலங்கையில் சுன்னாகம் என்ற சிறிய நகரை நிருமாணித்தவர் எனக் கூறப்படுகிறது.[3] சரவணமுத்துவுடன் கூடப் பிறந்தவர்கள் இரத்தினசோதி, நனசோதி, தர்மசோதி, மாணிக்கசோதி, சப்தரணசோதி ஆகியோர் ஆவர்.[1]கல்கிசை புனித தோமையர் கல்லூரில் கல்வி பயின்றார்.[1][2] பள்ளிக்கூட விளையாட்டுக் கழகத்தில் உறுப்பினராக இருந்து, துடுப்பாட்ட, உதைபந்தாட்ட அணிகளிலும் சேர்ந்து விளையாடினார்.[2]இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர்,[1][2] சரவணமுத்து கொழும்பு றோயல் கல்லூரி சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2]இந்தியக் குடிமைப் பணியில் சேருவதற்காக 1915 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ச் பிட்சுவில்லியம் கல்லூரியில் சேர்து படித்தார்.
ஆனாலும், குடும்ப சூழலால், அவரால் படிப்பைத் தொடர முடியாமல் போனது.[2][3]
புத்தளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமாரு என்பவரின் மகள் சிபில் தங்கம் என்பவரை திருமணம் புரிந்தார்.
Richard farrant biographyஇவர்களுக்கு பாஸ்கி, சந்திரி என இரண்டு ஆண்களும், சகுந்தலா என்ற ஒரு பெண்ணும் பிள்ளைகள் உள்ளனர்.[1] இவர்களில் பாஸ்கியின் மகன் பாக்கியசோதி மாற்றுக் கொள்கைகள் மையத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார்.[2]
பணி
[தொகு]1919 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய சரவணமுத்து இலங்கைக் குடியுரிமை சேவையில் சேர்ந்து, ஆரம்பத்தில் கொழும்பு கச்சேரியில் பணியாற்றினார்.[2][3] பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றிய இவர் குடியுரிமை சேவையாளராகத் தரமேற்றப்பட்டார்.[1] 1926 இல் முல்லைத்தீவிலும் பின்னர் அம்பாந்தோட்டையிலும்மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார்.[1][2]பதுளை, களுத்துறை, கேகாலை, குருணாகல் ஆகிய இடங்களில் நீதித்துறை அலுவலராகப் பணியாற்றினார்.[1][2] 1946 இல் விவசாயத்துறை அமைச்சில் பணியாற்றிய பின்னர், தேயிலை, இரப்பர் கட்டுப்பாடு ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.[1][3] அப்போதைய காலகட்டத்தில் நாட்டிலேயே மிக அதிக வேதனம் பெற்ற அரசு அதிகாரியாக இவர் திகழ்ந்தார்.[2] இவரது போர்கால சேவைக்காக இவருக்கு பிரித்தானிய அரசின் சென் மைக்கேல், சென் ஜோர்ஜ் விருது 1946 புத்தாண்டில் அறிவிக்கப்பட்டதாயினும், அவர் விருதை ஏற்றுக்கொள்ளவில்லை.[2][3]
1946 ஆம் ஆண்டில் இளைப்பாறிய பாக்கியசோதி, அரசியலில் நுழைந்தார்.[2] 1947 1வது நாடாளுமன்றத் தேர்தலில்சுயேட்சை வேட்பாளராக கொழும்பு தெற்கில் போட்டியிட்டு 640 வாக்குகளால் இரண்டாவதாக வந்து தோற்றார்.[4] இத்தேர்தலில் முதலாவதாக வந்து வெற்றி பெற்ற ஆர்.
ஏ. டி மெல் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தனது பதவியை இழந்தார்.[2] 1948 நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் பாக்கியசோதி போட்டியிட்டு மீண்டும் தோற்றார்.[5]
சமூகப் பணி
[தொகு]சரவணமுத்து தமிழ் யூனியன் துடுப்பாட்ட, தடகளக் கழகத்தில் இணைந்து அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.[1] 1948 முதல் 51 வரை இக்கழகத்தின் தலைவராக இருந்து பணியாற்றினார்.[6] கழகத்துக்கான அரங்கம் ஒன்றை நிறுவினார்.
கொழும்பு ஓவல் என அழைக்கப்படும் இவ்வரங்கத்திகு பாக்கியசோதியின் நினைவாக 1977 ஆம் ஆண்டில் பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[1][3] பி. சரா விருது என்ற துடுப்பாட்டத் தொடர் 1949 முதல் 1982 வரை விளையாடப்பட்டு வந்தது.[1] சரவணமுத்து 1937 முதல் 1950 வரை இலங்கைத் துடுப்பாட்டக் கழகத்தின் தலைவராகவும், 1949 முதல் 1950 வரை இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தின் முதலாவது தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.[2][3]